எத்தனையோ சினிமாக்களை ஆங்கிலப்படத்தின், ரஷ்யப்படத்தின் "காப்பி" "உல்டா" என்று வரிந்துகட்டிக்கொண்டு விமர்சிக்கும் சில வலைப்பதிவர்கள் உள்ளனர். ஆனால் வலைப்பதிவர்களில் அப்படி காப்பி அடித்து தன்னுடைய பதிவு போல் போட்டுக்கொள்ளும் சில பதிவர்களைப்பற்றி யாருமே எழுதுவது இல்லை. ஏன்? நந்தலாலா படத்தை காப்பி, என்று வலையுலகத்தில் அனைவரும் கிழிகிழி என்று கிழித்து தொங்கவிட்டனர். மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல். அப்படி வலைப்பதிவர்கள அதை கிழிகிழி என்று தொங்கவிட்டதற்கு பின்தான் மிஷ்கின் அந்தப்படத்தை கிகுஜிரோ படத்தின் தழுவல் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத்தொடங்கினார். ஆனாலும் நம் பதிவர்கள் அவரை சும்மாவிடவில்லை. ஏன் அந்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்து ஒரு டைட்டில் கார்ட் கூட போடவில்லை என்று கேட்டு தோண்டி துருவி கிழங்கெடுத்தனர். மிகச்சரியான கேள்வியே.
தவறுகள் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்டு பதிவெழுதும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுலகிலேயே இதுபோல் சிலர் நடந்துகொள்வதை தட்டிகேட்டு எழுதுவதில்லை? இதோ அப்படி நிழந்த ஒரு பதிவரின் தவறான போக்கு.. சமீபகாலத்தில் இந்திராவின் கிறுக்கல்கள் என்ற பெயரில் ஒரு பதிவர் எழுதிவருகிறார். அவர் சமீபத்தில் புறக்கணிப்பின் வெறுமை என்ற பெயரில் ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் உண்மையில் இந்தப்பதிவு அவருடையது இல்லை
இந்தக்கவிதை அவரால் எழுதப்பட்டது இல்லை. சல்மா என்ற மிகப்பிரபலமான கவிஞர் அவர்களின் கவிதைத்தொகுப்பான ஒரு மாலையும் இன்னொரு மாலையும் என்ற கவிதைத்தொகுப்பில் இருந்த "இவ்விடம்" என்ற கவிதையை எடுத்து எழுதி இருக்கிறார். இதோ அந்த கவிதைக்கான லிங்க்..
இந்தக்கவிதையை தானே எழுதியது போல் தன்னுடைய வலைத்தளத்தில் இந்திரா அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். இந்த கவிதைக்கு முப்பதிற்கும் மேற்பட்ட பதிவர்கள் வாவ் அருமை என்று பாராட்டு மழை வேறு. ஒரு கவிதையை யார் எழுதியது என்று கூட தெரிந்துகொள்ளாமல் பாராட்டும் பதிவர்களின் மனப்போக்கை என்னவென்று சொல்வது?
இதுபரவாயில்லை.. குட்டி குட்டி கவிதைகள் என்ற பெயரில் சில கவிதைகளை இவர் பதிவிட்டுள்ளார். அந்த அத்தனை குட்டிகவிதைகளும் சல்மாவின் வலைத்தளத்தில் இருந்து எடுத்தாளப்பட்டதே. மிக புத்திசாலித்தனமாக ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு தொகுப்பில் இருந்து எடுத்து பதிவிட்டுள்ளார்
இதோ அந்த குட்டி குட்டி கவிதைகள் எடுக்கப்பட்ட கவிஞர் சல்மாவின் லிங்க்
லிங்க் 1
லிங்க் 2
இந்தப்பதிவில் கவிஞர் சல்மாவுக்கு நன்றி என்று எங்கேயும் இவர் பதிவிடவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமாக அந்த கவிதையின் லேபிளில் "படித்ததில் பிடித்தது" என்ற ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டுள்ளார். ஆனால் இந்த விஷயத்தை படித்தவர்கள் யாருமே கவனிக்கவில்லை.. அந்த குட்டிகுட்டி கவிதைகளை பாராட்டி பக்கம் பக்கமாக கமெண்டுகள் வேறு.. ஆனால் அந்தப்பதிவரே, ஒரு இடத்தில் கூட இது என்கவிதை இல்லை என்ற வார்த்தையை கூறவில்லை.. இவரது மற்ற பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டால் எல்லா பின்னூட்டத்திற்கும் விளக்கமாக பதில் பின்னூட்டமிடுவார். ஆனால் இந்தக்கவிதையை இவர் எழுதியது என்று நினைத்து பின்னூட்டமிடும் வாசகர்களுக்கு ஒரு வார்த்தை கூட நன்றி சொல்ல மாட்டார். ஏனென்றால அதுதான் அவரது கவிதையே இல்லையே. இந்தக் கவிதையிலாவது படித்ததில் பிடித்தது என்று லேபிளிட்டுள்ளார். ஆனால் புறக்கணிப்பின் வெறுமை என்ற கவிதையில் தானே கிறுக்கியதாக லேபிளிட்டுளார். இதை எந்தப்பதிவரும் ஏன் கவனிக்கவில்லை. மிஷ்கின் இன்னொரு படைப்பை தழுவி எடுத்ததற்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. என்று குமுறிய பதிவர்கள், இப்போது எங்கே போனார்கள்?
நேற்று ஒரு பதிவில் இது தான் சிந்தித்தது அல்ல என்று என்று குறிப்பிடிருக்கும் இந்திரா அவர்கள், ஏன் இதற்கு முந்தைய பதிவுகளான புறக்கணிப்பின் வெறுமை, குட்டி குட்டி கவிதைகள் போன்றவற்றில் இதைக்குறிப்பிடவில்லை? பதில் சொல்வாரா?
இனி தவறுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படும்....
நேற்று ஒரு பதிவில் இது தான் சிந்தித்தது அல்ல என்று என்று குறிப்பிடிருக்கும் இந்திரா அவர்கள், ஏன் இதற்கு முந்தைய பதிவுகளான புறக்கணிப்பின் வெறுமை, குட்டி குட்டி கவிதைகள் போன்றவற்றில் இதைக்குறிப்பிடவில்லை? பதில் சொல்வாரா?
இனி தவறுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படும்....
அன்புள்ள நண்பருக்கு..
ReplyDeleteஎன்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான். அந்த இரண்டு பதிவுகளின் லேபிள்களிலும் “படித்ததில் பிடித்தது” என்று தமிழில் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் படிக்கவில்லையா???
அடுத்தவரை மட்டம் தட்டி தாங்கள் பாராட்டுப் பெற்றுக்கொள்ளும் வகையராவைச் சேர்ந்த கூட்டத்தில் நீங்கள் எப்போது சேர்ந்தீர்கள்???
இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஏன் இந்திரா உங்களோட புறக்கணிப்பின் வெறுமை' ங்கிற பதிவுல நீங்களே எழுதியதாக லேபிளில் கிறுக்கியது இந்திரா அப்படின்னு பதிவிட்டீங்க? அந்தக்கவிதையை அத்தனை பேரும் பாராட்டும் போதும் அதை எழுதினது நீங்க இல்லைன்னு பதில் பின்னூட்டத்துல சொல்ல வேண்டியது தானே? குட்டி குட்டி கவிதைகள்ன்னு எழுதுனீங்க.. அதுல லேபிள்'ல படித்ததில் பிடித்ததுன்னு போட்டு இருக்கீங்க.. ஆனா அந்தக்கவிதையை உங்க கவிதையா நினைச்சி பாராட்டிகிட்டு இருக்கிற வாசகர்களுக்கு அதை எழுதினது நீங்க இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே? ஏன் சொல்லாம அமைதியா இருந்தீங்க..
ReplyDeleteஇங்க பைத்தியக்காரங்களா ஆகிறது படிக்கிற வாசகர்கள் தானே?
//அன்புள்ள நண்பருக்கு..
ReplyDeleteஎன்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான். அந்த இரண்டு பதிவுகளின் லேபிள்களிலும் “படித்ததில் பிடித்தது” என்று தமிழில் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் படிக்கவில்லையா???
அடுத்தவரை மட்டம் தட்டி தாங்கள் பாராட்டுப் பெற்றுக்கொள்ளும் /வகையராவைச் சேர்ந்த கூட்டத்தில் நீங்கள் எப்போது சேர்ந்தீர்கள்???//
மன்னிக்க வேண்டும் இந்திரா.. புறக்கணிப்பின் வெறுமை என்ற பதிவில் நீங்கள் லேபிளில் "கிறுக்கியது இந்திரா " என்றுதான் பதிவிட்டுள்ளீர்கள்..
ஆனால் குட்டி குட்டி கவிதைகள் என்ற பெயரில்தான் "படித்ததில் பிடித்தது" என்று பதிவிட்டுள்ளீர்கள்.. நாங்கள் முட்டாள்கள் அல்ல
வாசகர்களை ஏமாற்றுவதாக இருந்தால் ”படித்ததில் பிடித்தது“ என்று நான் கூறத் தேவையில்லையே.. உங்களைப் போன்ற நக்கீரர்களும் வலையுலகத்தில் இருப்பது நான் அறிந்ததே. அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் பெரும்பாலானவை “பதிவு புரியவில்லை“ என்பதாகத் தான் இருந்தது. தாங்கள் அதை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். புரியாத பதிவைப் பகிர்ந்தமைக்கு வருத்தப்பட்டிருக்கிறேன். மேலும் நான் எழுதினேன் என்று அந்தப் பதிவின் பதில் பின்னூட்டமேதும் நான் குறிப்பிடவில்லையே. லேபிளைப் பார்க்காமல் பதிவினை மட்டுமே நீங்கள் படித்திருந்தால் தவறு என்னுடையதல்லவே.
ReplyDelete//என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான்.//
இந்த வார்த்தையை ஏன் நீங்கள் அன்று சொல்லவில்லை.. அந்தக்கவிதையை நீங்களே எழுதியதாக நினைத்து பாராட்டிய வாசகர்கள் அனைவரும் பைத்தியக்கார்களா? அவர்களிடம் ஏன் நீங்கள் அந்தக்கவிதை எழுதியவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை??
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஓ கவிதை எழுதியிருக்கீங்களா.... படிச்சுட்டு வர்ரேன் //
//Balaji saravana said...
மிகச் சிறந்த படைப்பு இந்திரா!//
//கவிதை காதலன் said...
இந்திரா அவர்கள் பிரபலமான கவிஞராகப்போகிறார் போல... //
//Lakshmi said...
அருமையான கவிதை. தொடரட்டும் உங்கள் பணி,
//தஞ்சை.வாசன் said... //
தலைப்பில் மட்டும் இருக்கட்டும் எல்லார் வாழ்விலும் வெறுமை...
கவிதை போல் எல்லாம் அமையட்டும் அருமையாய்...//
//அருண் பிரசாத் said...
நீங்களே வா எழுதுனீங்க????//
//சி.பி.செந்தில்குமார் said...
கவிதைகள் அருமை. 2 பதிவா பிரிச்ச்ப்போட்டிருக்கலாம்.தலைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் வெச்சிருக்கலாம் //
இவங்க அத்தனை பேரும் நீங்க எழுதினதா நினைச்சி தானே பாராட்டுனாங்க இல்ல. அப்போ ஏங்க நீங்க இந்தக்கவிதையை எழுதினது நான் இல்லைன்னு சொல்லலை...??
பதிவர் அர்ச்சனை மற்றும் இந்திரா அவர்களுக்கு
ReplyDeleteஆஹா சபாஷ் சரியான போட்டி
அன்புள்ள அர்ச்சனைக்கு,
ReplyDeleteநான்(ங்கள்) செய்ததும் தவறாக இருக்கலாம்... அதற்கு மற்ற பின்னூட்டம் இட்ட மற்ற பதிவர் நண்பர்கள் சார்பிலும் வருந்துகிறேன்...
பதிவுகளை ஒருவர் பதிவிடும் போது அது எந்த வகையை சார்ந்தது? அதை அவரேதான் எழுதினாரா? என்று ஆராய்ந்து பார்க்காமல் பின்னூட்டம் இட்டது தவறு... அப்படி நாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவரின் பதிவுகளையும் தேடி ஆராய்ந்து பார்த்து பின்னூட்டம் இட்டால் அது நடைமுறை வாழ்வில் சரிபடாத ஒன்றானதாக அமையும்...
அடடா...
ReplyDeleteவிடுங்க தோழிகளே... வீண் சண்டை வேண்டாம்...
இது போன்ற சிறு தவறுகள் வாழ்வில் நடப்பது தவிர்க்க முடியாதது...
இனிமேல் பதிவர்கள் அடுத்தவர்களின் படைப்பை எடுத்தாளும் போது, சிறிய ரெஃபரென்ஸ் தர வேண்டும்... இந்த வாதம் சரியே...
நான் இது போன்று செய்திருக்கிறேன்... (என் சமீபத்திய பதிவுகளில் கூட....)
அர்ச்சனா, இந்திரா இனியும் நீங்கள் தோழி்களாகவே வலம் வர வேண்டும் என்பதே என் மற்றும் அனைத்து தோழமைகளின் விருப்பமும்...
படித்ததில் பிடித்ததா இருந்தாலும் அதை அவர் அனுமதில் இல்லாமல் மீள் பதிவு செய்வது தவறு. அப்படியே வெளியிட்டாலும் இந்த கவிதை சல்மா எழுதியது என்று போடுவது தானே நாகரீகம்?
ReplyDeleteஇந்திரா நீங்கள் அறிந்தோ அறியாமலோ செய்தது தவறுதான். இங்கே உங்களின் விவாதம் பொருத்தமாக இல்லை. தவறை ஒப்புக்கொண்டு நீங்கள் மீள் பதிவு செய்த இடுகைகளில் அந்த கவிதைகளை எழுதியது சல்மா என்று அவருக்கு அங்கீகாரம் கொடுப்பதில் என்ன குறைந்து போய் விடுவீர்கள்.
இது போன்ற தவறுகள் சகஜம்தான். அதை திருத்தி கொள்வதே நலம்.
கோபி.
நீர் ஒரு வழக்குறைஞர்.
ReplyDeleteபொதுவாக சிந்தனைகளைவிட அதைக் குறித்த தெளிவே மிகப் பெரிய முடிவுகளைத் தரும். இங்கு வலைப்பதிவில் ஒரு துள்ளாட்டம் பார்க்க முடிகிறது. இது ஒருவகையில் ரசனைக்குரியதே.. மேலும் வயது வரம்பின்றி கலந்துரையாட முடிகிறது. இதுவும் ஆரோக்கியமானதே. என்னைப்பொருத்தமட்டில் இந்த அளவுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் துணியும் ஒவ்வொருவரும் ஒரு psychological let off phase ல் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
படைப்புகளுக்கும் படைப்பவர்களுக்கும் எப்போதும் மரியாதை உண்டு.
நீங்கள் விடாப்பிடியாய் குறை சொல்லுவதுதான் சற்றே சங்கடத்திற்குள்ளாக்குகிறது..
வளர விடுங்கள். வளரட்டும். எல்லோரும் வளர்வதுதான் சமுதாயத்திற்கு நல்லது. எண்ணங்களை வெளிப்படுத்துவது வளர்ச்சியின் ஒரு அறிகுறிதான். விழுந்த குழந்தை எழுவதில்லையா? அதைப்போலத்தான். அவருக்கும் எழுத்து பிடிக்கிறது.
எழுதத் தூண்டுவோம். வேறென்ன. வெறும் சண்டை நல்ல விளைவைத் தராது..
Just give her a pat and allow her to grow. Dont crush her and prevent a bud to blossom.
God Bless You.
மேலே கோபி என்ற பெயரில் உள்ள ப்ளாக்கர் அல்லாத கமெண்ட் என்னுடையது அல்ல என்பதை அர்ச்சனா, இந்திரா இருவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்...
ReplyDeleteஎன் கமெண்ட் எப்போதும் ப்ளாக்கர் ஐடியுடன் தான் இருக்கும்...
கமெண்டில் உள்ள என் பெயரின் மேல் க்ளிக்கினால், அது என் வலைப்பங்களில் ஏதாவது ஒன்றுக்கு இட்டு செல்லும் (1) ஜோக்கிரி (அ) 2) எடக்கு மடக்கு
புரிதலுக்கு நன்றி...
ஆஹா... ஆர். கோபி! :)
ReplyDeleteஅது நான் இல்லை. நான் அனானி கோபி. பதிவுலக வாசகன்.
//எழுதத் தூண்டுவோம். வேறென்ன. வெறும் சண்டை நல்ல விளைவைத் தராது..//
ReplyDeleteசரி வெட்டிப்பேச்சு சார்.
ஆனால் தவறை சுட்டி காட்டினால் அதை ஒப்புக்கொண்டு திருத்தி கொள்வது நலம். இந்திரா கோபப்படுவது சரியா?
இந்த பிரச்னையை விடுங்கள். பல பதிவருக்கும் இது ஒரு உதாரணமாக இருக்கட்டும்.
உங்களுடைய பிடிவாதத்தைப் பார்த்தால் இதில் ஏதோ உள்நோக்கு உள்ளதாகத் தெரிகிறது..
ReplyDeleteprofile, anonymous comments.. etc.,
ஆகட்டும்.
@ அர்சனை
ReplyDeleteதவறு கண்டுபிடித்தபடசத்தில் தனி மெயில்லோ, கமெண்ட்டிலோ போடுவதே நல்லது... தனி பிளாக் ஓபன் செய்து இருப்பது தேவை இல்லாதது....
நாங்கள் எல்லாம் படித்த மேதாவிகள் இல்லை... சல்மாவோ, வைரமுத்துவோ என்ன எங்கு எழுதினார் என்று பார்த்து கொண்டு இருக்க முடியாது... எங்களை பொருத்த வரை பதிவில் இருந்த கவிதை நன்றாக இருந்தது.... அருமை என க்ருத்துரை இட்டோம்... இதறகாகவெல்லாம் பதிவர் மன போக்கைஅ பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை
//9 ஜனவரி, 2011 8:03 am
ReplyDeleteஅர்ச்சனை சொன்னது…
//S Maharajan said...
சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை... //
ஆறுதல் சொல்லும் முன் நடந்த விஷயத்தைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டும் சொல்லுங்கள் நண்பரே.. தவறிருந்தால் மன்னிக்கவும்/////
உண்மை தான் நண்பரே!
இது தன்னுடைய கற்பனை அல்ல
என்று சொல்லிய பின்னும் விவாதம் கூடாது
அது அழகல்ல!!!!!!!!!!!
(புரிந்து கொள்விர்கள் என்று எண்ணுகிறேன் )
விடுங்க தோழிகளே...
//உங்களுடைய பிடிவாதத்தைப் பார்த்தால் இதில் ஏதோ உள்நோக்கு உள்ளதாகத் தெரிகிறது..//
ReplyDeleteகேள்வி கேட்டா உள்நோக்கம் அப்படி இப்படின்னு பதிவ திசை திருப்பாதீங்க சார்.
இப்படி நீங்கள் ஓவராக சொம்பு தூக்குவதால் உங்களுக்கும் ஒரு உள்நோக்கம் இருக்குன்னு நான் கேட்கலாமா சார்?
மன்னிக்கவும்.
ReplyDeleteதவறு என்னுடையதுதான்.
God Bless You.
இப்படி நீங்கள் ஓவராக சொம்பு தூக்குவதால் உங்களுக்கும் ஒரு உள்நோக்கம் இருக்குன்னு நான் கேட்கலாமா சார்? //
ReplyDeleteகோபி சார், தவறை சுட்டி காட்டுவதிலும் ஒரு இங்கிதம் இருக்கு சார்... இது தப்புங்க திருத்தி கோங்கன்னு சொன்னா யார இருந்தாலும் யோசிப்பாங்க.. நீங்க பேசற மாறி பேசின கோவம் தான் வரும்...
?>>>>ஒரு கவிதையை யார் எழுதியது என்று கூட தெரிந்துகொள்ளாமல் பாராட்டும் பதிவர்களின் மனப்போக்கை என்னவென்று சொல்வது?>>
ReplyDeleteTHIS LINES R ABSOLUTELY WRONG.WE USULLY THINK THAT THE OWNER OF THE BLOG IS THE AUTHOR OF THE RHYMES...
இங்கே கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.என்னுடைய ஒரே ஒரு வருத்தம் ஏன் இவர் கவிதை எழுதியவர் பெயரை குறிப்பிடவில்லை என்பது மட்டும்தான்... மற்றவர்கள் பாராட்டும் போதும் அதை தனக்கான பாராட்டாக எப்படி ஏற்றுக்கொள்ள மனம் வருகிறது என்பது மட்டும்தான்.. தன்னுடைய எல்லா படைப்புகளிலும் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் இந்திரா அவர்கள் ஏன் இந்த கவிதைகளில் மற்றவர்கள் பாராட்டுகையில் அது தன்னுடையது இல்லை என்று மறுதலித்து பதில் கூறவில்லை? இந்திரா இனியும் அடுத்தவர்களது படைப்பை எடுத்தாள்கையில் அவரது பெயரையும் அந்த லிங்கையும் குறிப்பிடவேண்டும் என்பதே என் விருப்பம்.
ReplyDeleteசெந்தில்சார்.. உங்கள் வார்த்தையில் இருக்கும் நியாயம் புரிகிறது.. மன்னிக்க வேண்டும்
ReplyDeleteany how, in opening u r becoming familiar to all bloggers.we expect variety post from u
ReplyDeleteippo intha posttukku naan comment podanumaa illay mail annupanumaa;
ReplyDeletesabayila yaaraavathu irrunthaa konjam sollungappaaa
[appuram comment moderationai eduththuvidavum please]
iiiiiiiiiiiiiiiya me the 25thu comment; vadai sandai poda yaaraavathu irrukeengalaaa
ReplyDeleteஇருவரும் "அர்ச்சனை &இந்திரா" பெண் பதிவர்கள்.
ReplyDeleteசபாஷ் சரியான போட்டி.
// இந்திரா அவர்களுக்கு Followers (199) உள்ளனர்.
அர்ச்சனை அவர்களுக்கு Followers (4) உள்ளனர். //
கவலை படாதீங்க "அர்ச்சனை" உங்களுக்கும் விரைவில் அதிக Followers கிடைப்பார்கள்.
பெண் பதிவர் என்றால் இங்கு மவுசு அதிகம்.
இருந்தாலும் பெண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இங்க போய் முதலில் படியுங்கள் : http://terrorkummi.blogspot.com/2010/12/blog-post_24.html
நெத்தியடி.
ReplyDeleteகோபி, R.Gopi ரெண்டுமே நான் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்:)
ReplyDeleteஎன் பின்னூட்டங்கள் Gopi Ramamoorthy என்ற பெயரில் என் ப்ரோபைலோடு வரும்.
நன்றி.
@ வெட்டிப்பேச்சு
ReplyDelete//எல்லோரும் வளர்வதுதான் சமுதாயத்திற்கு நல்லது. எண்ணங்களை வெளிப்படுத்துவது வளர்ச்சியின் ஒரு அறிகுறிதான். விழுந்த குழந்தை எழுவதில்லையா? அதைப்போலத்தான். அவருக்கும் எழுத்து பிடிக்கிறது.//
தவறான கருத்து
ஒருவருடைய வார்த்தைகளையும்,படைப்புகளையும் எழுதியர் அனுமதி இல்லாமல் மீள்பதிவு செய்வது தவறான ஒரு செயல். ஞயாயப்படுத்த வேண்டாம். பிடித்திருந்தால் பிடித்த வரிகள் என்று அந்த வரிகள்
பற்றி சில விளக்கம் கொடுத்து அந்த கவிதைக்கான லிங்க் கொடுப்பதுத்தான் நல்லது.
@ அர்ச்சனை
உங்கள் பதிவுலக வருகைக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்திரா என்ற பதிவர் பல நாட்களாக பதிவுலகில் இருப்பவர் அவர்கள் மீது குறை இருப்பதாக உங்களுக்கு பட்டிருந்தால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம், மீண்டும் அவர் அதே தவறை செய்தால் பதிவுலகினருக்கு தெரியப்படுத்தி இருக்கலாம். தெரியாமல் ஒருவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அவர் மனம் புண்படுத்தி இருக்க வேண்டாம் என்றுத்தான் தோன்றுகிறது. பதிவுலகில் பாராட்டுக்களை பெறுவது சாதாரண விஷயம் இல்லை ஆனால் இந்த பாராட்டுக்கள் மன நிம்மதிக்காகத்தான் பணத்திற்காக இல்லை. இந்த ஒருப்பதிவால் அவருடைய ஒட்டுமொத்த உழைப்பும் தாழ்த்தப்பட்டுவிட்டதாக கருதுகிறேன். தயவு செய்து இந்த பதிவை மற்றவர்கள் படிக்காதவண்ணம் இப்போதே அழித்தால் மகிழ்ச்சி அடைவேன்.
நிச்சயம் நான் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி போன்ற நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் இதுபோன்று மற்றவர்கள் பதிவை அனுமதி இல்லாமல் பதிவிடுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கச்சொல்லி.
தோழிக்கு என் சிறு வேண்டுகோள் - இந்த பதிவை அழிக்கவும்
@ வெட்டிப்பேச்சு
ReplyDelete//எல்லோரும் வளர்வதுதான் சமுதாயத்திற்கு நல்லது. எண்ணங்களை வெளிப்படுத்துவது வளர்ச்சியின் ஒரு அறிகுறிதான். விழுந்த குழந்தை எழுவதில்லையா? அதைப்போலத்தான். அவருக்கும் எழுத்து பிடிக்கிறது.//
தவறான கருத்து
ஒருவருடைய வார்த்தைகளையும்,படைப்புகளையும் எழுதியர் அனுமதி இல்லாமல் மீள்பதிவு செய்வது தவறான ஒரு செயல். ஞயாயப்படுத்த வேண்டாம். பிடித்திருந்தால் பிடித்த வரிகள் என்று அந்த வரிகள்
பற்றி சில விளக்கம் கொடுத்து அந்த கவிதைக்கான லிங்க் கொடுப்பதுத்தான் நல்லது.
@ அர்ச்சனை
உங்கள் பதிவுலக வருகைக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்திரா என்ற பதிவர் பல நாட்களாக பதிவுலகில் இருப்பவர் அவர்கள் மீது குறை இருப்பதாக உங்களுக்கு பட்டிருந்தால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம், மீண்டும் அவர் அதே தவறை செய்தால் பதிவுலகினருக்கு தெரியப்படுத்தி இருக்கலாம். தெரியாமல் ஒருவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அவர் மனம் புண்படுத்தி இருக்க வேண்டாம் என்றுத்தான் தோன்றுகிறது. பதிவுலகில் பாராட்டுக்களை பெறுவது சாதாரண விஷயம் இல்லை ஆனால் இந்த பாராட்டுக்கள் மன நிம்மதிக்காகத்தான் பணத்திற்காக இல்லை. இந்த ஒருப்பதிவால் அவருடைய ஒட்டுமொத்த உழைப்பும் தாழ்த்தப்பட்டுவிட்டதாக கருதுகிறேன். தயவு செய்து இந்த பதிவை மற்றவர்கள் படிக்காதவண்ணம் இப்போதே அழித்தால் மகிழ்ச்சி அடைவேன்.
நிச்சயம் நான் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி போன்ற நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் இதுபோன்று மற்றவர்கள் பதிவை அனுமதி இல்லாமல் பதிவிடுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கச்சொல்லி.
தோழிக்கு என் சிறு வேண்டுகோள் - இந்த பதிவை அழிக்கவும்
@ Thoppithoppi
ReplyDelete//தவறான கருத்து
ஒருவருடைய வார்த்தைகளையும்,படைப்புகளையும் எழுதியர் அனுமதி இல்லாமல் மீள்பதிவு செய்வது தவறான ஒரு செயல். ஞயாயப்படுத்த வேண்டாம். பிடித்திருந்தால் பிடித்த வரிகள் என்று அந்த வரிகள்
பற்றி சில விளக்கம் கொடுத்து அந்த கவிதைக்கான லிங்க் கொடுப்பதுத்தான் நல்லது.//
அன்பரே..
தவறு யார் செய்தாலும் அல்லது யார் உடந்தையாயிருந்தாலும் தவறு தவறுதான்.. மறுக்கவில்லை. நடந்த நிகழ்வுக்கு தீர்வுதான் காண வேண்டுமேதவிர அதற்கிணையான மற்றொரு குற்றத்தை நிகழ்த்தக் கூடாது என்பதுதான் என் எண்ணம். மன்னிக்கத்தகுந்தவைகள் மனிதர்களிடையே மன்ன்னிப்பைப் பெறவேண்டும்..மற்றபடி நான் தவறுக்கு வக்காலத்து வாங்கவில்லை. வாதம் முடிவடையட்டும் என்ற கருத்தில்தான் எனது கருத்தைச் சொன்னேன். ஆனால் சிலரது கருத்துக்கள் என்னை புண்படச்செய்துவிட்டன. நான் பதிவுலகிற்கு புதிது. மேலும் எனக்கு இது தேவையில்லாதது. இருப்பினும் உங்களது கருத்துக்கு நன்றி.
முகம் பார்த்துப் பேசினாலே சரியாகப் புரிந்து கொள்ளாத இந்த உலகம் இந்த மறைஉலகில் உண்மையைப் புரிந்து கொள்ளுமா என்பது சந்தேகமே..
நன்றிகள்
Gopi Ramamoorthy ஆமா யாரப்பா நீ?
ReplyDeleteசும்மா கோபி நான் இல்லை நான் இல்லைன்னு சொல்லற?
நீ இல்லைல அப்புறம் எதுக்கு என் பெயர் இப்படி வரும் அப்படி வரும்ன்னு புலம்பற? குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.
ஒரு பொண்ணு புதுசா பதிவு எழுத வந்துறகூடாதே! அப்படி வந்துட்டா அவகிட்ட "நான் அவன் இல்லை" என்று Film காட்டுவது.
போயா போய் வேற வேலைய பாரு போ போ
thozi oru chiru ithavi
ReplyDeletehttp://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html
intha pathivai konjam padinga.
enna pannalaamunu sollunga